பட்டுக்கோட்டையில் இருந்து 12 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. அதிராம பட்டினம். இத்தலத்தில் எழுந்தருளியுள்ள அபயவரதீஸ்வரரை வழிபடு வோருக்கு நோய்கள் தீரும்; எம பயம் அகன்று, தேக பலமும் ஆயுள் பலமும் கூடும்; தடைப்பட்ட திருமணங்களும், நாகதோஷம் உள்பட பல்வேறு தோஷங்களும் விலகும் என்று கூறப்படுகிறது.