பதிவு செய்த நாள்
30
ஏப்
2018
12:04
திருப்பாச்சூர்:திருப்பாச்சூர் காமேஸ்வரர் சமேத லலிதா மகா திரிபுரசுந்தரி கோவிலில், மகாலட்சுமி சூக்த மூல மந்திர யாகம் நடந்தது. திருவள்ளூர் அடுத்த புதிய திருப்பாச்சூரில் அமைந்துள்ளது, காமேஸ்வரர் சமேத லலிதா மகா திரிபுரசுந்தரி கோவில். இங்கு, நேற்று, 1,008 தாமரை மலர்களாலும், 64 வகை விசேஷ மூலிகைகளாலும், மகாலட்சுமி சூக்த மூல மந்திர யாகம் நடந்தது.முன்னதாக காலை, 8:00 மணிக்கு, விக்னேஸ்வர பூஜையுடன் விழா துவங்கியது. பின், காலை, 8:30 மணிக்கு சவுபாக்ய லட்சுமி ஆவாஹனம் உபசார பூஜையும், காலை, 9:30 மணிக்கு 1,008 தாமரைகளால் மகாலட்சுமி மூல மந்திர யாகமும், கலச உத்வாசனமும் நடந்தது.மாலை, குபேர பூஜையும், லலிதா ஸஹஸ்ர நாம அர்ச்சனை, மகா நைவேத்தியமும் நடந்தது. இதில், திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.