ஆதி திருச்சபை தந்தையரில் ஒருவரான போலிகார்ப், தன் 86 வயதிலும் உற்சாகமாக இருந்தார். அவரை ரோம அரசு கைது செய்து, கிறிஸ்துவை வணங்கக் கூடாது, மீறினால் தண்டனை வழங்கப்படும் என்றும் உத்தரவிட்டது. அவர் அதை பொருட்படுத்தவில்லை. தண்டனை வழங்கப்படும் இடத்துக்கு உற்சாகமாக நடந்து சென்றார். அமைதியான முகத்துடன் பேசினார், “இத்தனை வருடங்களும் என் அருமை இயேசு என்னை இனிமையாக நடத்தினார். அவர் எனக்கு தீங்கும் செய்யவில்லை. எனவே நான் அவரை வணங்காமல் இருக்க மாட்டேன். இப்போது மகிழ்ச்சியோடு மரணத்தை ஏற்கிறேன்,” என்றார். அவரை மரத்தில் கட்டி வைத்து உயிருடன் எரித்தனர். அப்போதும் சிரித்துக் கொண்டே இருந்தார். “உங்களை விட்டு விலகுவதுமில்லை, உங்களைக் கைவிடுவது மில்லை,” என்கிறார் இயேசு.