பதிவு செய்த நாள்
05
மே
2018
12:05
ராமநாதபுரம்: ராமநாதபுரம் பாரதிநகர் அருகே சேதுபதி நகர் மல்லம்மாள், தர்ம முனீஸ்வரர் கோயில் வருஷாபிஷேக விழா நடந்தது.நிகழ்ச்சிக்கான காப்பு கட்டும் நிகழ்ச்சி ஏப்., 25 காலை 9:00 மணிக்கு நடந்தது. மே 3ல் மாலை 5:30 மணிக்கு அனுக்ஞை, விக்னஷே்வர பூஜை, முதல் கால யாகபூஜை, ேஹாமம், பூர்ணாகுதி நடந்தது நேற்று (மே 4) காலை 6:00 மணிக்கு இரண்டாம் கால யாக பூஜை, மஹா பூர்ணாகுதி, கடம் புறப்பாடு நடந்தது. 10:30 மணிக்கு கும்பத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு, தீபாராதனை நடந்தது. மல்லம்மாள், தர்ம முனீஸ்வரர், சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது.