காரைக்குடி: கோவிலுார் ஐயுளி அம்மன் கோயிலில் மே 7, 8 தேதிகளில் உலக நன்மைக்காக கோவிலுார் மடாலய கல்வி நிறுவனங்கள் சார்பில் சண்டி ேஹாமம் நடக்கிறது. இதற்காக யாகசாலை அமைக்கப்பட்டு வருகிறது. மே 7-ம் தேதி காலை 7:00 மணி முதல் 11:30 மணி வரையும், மாலை 5:00 மணி முதல் இரவு 9:00 மணி வரை ேஹாமம் நடக்கிறது. 8-ம் தேதி காலை 7:00 மணி முதல் யாகசாலை பூஜை நடக்கிறது. அன்று காலை 11:00 மணிக்கு அம்மனுக்கு ஆராதனை நடக்கிறது. இதில் பங்கேற்க கோவிலுார் ஆதினம் மெய்யப்ப சுவாமி அழைப்பு விடுத்துள்ளார்.