பதிவு செய்த நாள்
07
மே
2018
12:05
சித்தாமூர்: அமைந்தங்கருணை பாஞ்சாலி அம்மன் கோவிலில், துரியோதனன் படுகளம் நேற்று, கோலாகலமாக நடைபெற்றது.சித்தாமூர் அடுத்த, அமைந்தங்கருணை பாஞ்சாலி அம்மன் கோவிலில், பாரத திருவிழா விமரிசையாக நடைபெற்று வருகிறது.கிராம தேவதை எட்டியம்மனுக்கு அருள் பெறுதல் நிகழ்வும், மாரியம்மனுக்கு கூழ் வார்த்தலும் முன்னதாக நடைபெற்றது.நேற்று காலை, துரியோதனன் படுகளம் கோலாகலமாக நடைபெற்றது. மாலை தீமிதி விழாவும் நடந்தது. சுற்று வட்டார கிராமத்தைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள், அம்மனைத் தரிசித்தனர்.விழா ஏற்பாடுகளை, அமைந்தங்கருணை, ஆற்காடு, கொக்கரந்தாங்கல், விளாங்காடு, இரும்பேடு, காவானுார், பனையூர், தண்ணீர்பந்தல், போந்துார் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள், சிறப்பாக செய்தனர்.