நடுவீரப்பட்டு: பண்ருட்டி அடுத்த பெரியநரிமேடு கிராமத்தில் அமைந்துள்ள தையல்நாயகி சமேத வைத்தியநாதர் சுவாமி கோவிலில் 9ம் ஆண்டு கும்பாபிஷக விழாவை முன்னிட்டு 108 திருவிளக்கு பூஜை நடந்தது. விழாவை முன்னிட்டு காலை 9:00 மணிக்கு 108 சங்கு ஸ்தாபனம் செய்யப்பட்டு ேஹாம வேள்விகள் நடந்தது. தொடர்ந்து விநாயகர், தையல்நாயகி, வைத்தியநாதர் சுவாமி உள்ளிட்ட சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடந்தது. பகல் 12:00 மணிக்கு 108 சங்கு அபிஷேகம் நடந்தது. மாலை 6:00 மணிக்கு 108 திருவிளக்கு பூஜை நடந்தது.