காரைக்குடி: காரைக்குடி கொப்புடையம்மன் கோயில் விழா நாளை காலை 6:33 மணிக்கு காப்பு கட்டுடன் தொடங்குகிறது. இரவு 9:00 மணிக்கு அம்பாள் சிம்ம வாகனத்தில் வீதி உலா வருகிறார். 9-ம் தேதி காலை வெள்ளி கேடயத்தில் அம்பாள் புறப்பாடு, இரவு காமதேனு வாகனத்தில் வீதி உலா நடக்கிறது. முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் 15-ம் தேதி நடக்கிறது. அன்று காலை 10:50 மணிக்கு அம்பாள் தேருக்கு எழுந்தருளல் நிகழ்ச்சியும், மாலை 5:00 மணிக்கு தேரோட்டமும் நடக்கிறது. மறுநாள் காலை 9:00 மணிக்கு காட்டம்மன் கோயிலிலிருந்து, கொப்புடையம்மன் கோயிலுக்கு தேர் திரும்பும் நிகழ்ச்சி நடக்கிறது. 17-ம் தேதி இரவு 11:00 மணிக்கு தெப்பத்தில் அம்பாள் உலா நடக்கிறது. ஏற்பாடுகளை இணை ஆணையர் ஜெகன்னாதன் தலைமையில் உதவி ஆணையர் ராமசாமி, செயல் அலுவலர் பிரதீபா செய்து வருகின்றனர்.