பதிவு செய்த நாள்
07
மே
2018
03:05
* மே 5, சித்திரை 22, சனி: சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள், சென்ன கேசவ பெருமாள் தேர், சமயபுரம் மாரியம்மன் வசந்த மண்டபம் எழுந்தருளல், தேனி வீரபாண்டி கவுமாரியம்மன் பவனி.
* மே 6, சித்திரை 23, ஞாயிறு: முகூர்த்த நாள், சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் வெண்ணெய்த்தாழி சேவை, தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் வைகுண்டபதி புறப்பாடு.
* மே 7, சித்திரை 24, திங்கள்: முகூர்த்த நாள், திருவோண விரதம், திருநெல்வேலி நெல்லையப்பர் கோயிலில் சபாபதி அபிஷேகம், செப்பறை நடராஜர் சங்காபிஷேகம், சென்னை சென்ன கேசவப்பெருமாள் புண்ணியகோடி விமானம் எழுந்தருளல்.
* மே 8, சித்திரை 25, செவ்வாய்: அஷ்டமி விரதம், பைரவருக்கு வடை மாலை சாத்தி வழிபடுதல், சிவகங்கை மாவட்டம் காரைக்குடி கொப்புடையநாயகி உற்ஸவம் அரம்பம், தேனி மாவட்டம் வீரபாண்டி கவுமாரியம்மன் பூப்பல்லக்கு.
* மே 9, சித்திரை 26, புதன்: திருநாவுக்கரசர் குருபூஜை, காரைக்குடி கொப்புடைய நாயகி காமதேனு வாகனம், வீரபாண்டி
கவுமாரியம்மன் முத்துப்பல்லக்கு, திருச்சி ஸ்ரீரங்கம் நம்பெருமாள் புறப்பாடு.
* மே 10, சித்திரை 27, வியாழன்: தத்தாத்ரேயர் ஜெயந்தி, சுவாமிமலை முருகப் பெருமான் தங்கக்கவசம் அணிந்து வைரவேல் தரிசனம், தேனி வீரபாண்டி கவுமாரியம்மன் பூப்பல்லக்கு, காரைக்குடி கொப்புடையநாயகி அன்னவாகனம்,
* மே 11, சித்திரை 28, வெள்ளி: ஏகாதசி விரதம், பெருமாளுக்கு துளசி மாலை அணிவித்து வழிபடுதல், தேனி வீரபாண்டி கவுமாரியம்மன் தேர், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் ரங்கமன்னார் கண்ணாடி மாளிகை எழுந்தருளல்.