கோயில்களில் மூலவரின் கருவறைக்கு முன்பாக துவார பாலகர்கள் நின்று கொண்டிருப்பார்கள். சிவன் கோயிலில் இருக்கும் துவார பாலகர்களுக்கு சண்டன்- பிரசண்டன் என்றும்; பெருமாள் கோயில்களில் இருக்கும் துவார பாலகர்களுக்கு ஜயன் - விஜயன் என்றும்; அம்பாள் சன்னிதிக்கு முன்பு இருக்கும் துவார பாலகிகளுக்கு ஹரபத்ரா - சுபத்ரா என்றும் பெயர்கள் வழங்கப்படுகின்றன.