சந்நியாசிகள் குடும்பஸ்தர்களிடம் பிச்சை எடுக்கும் போது, அவர்களைச் சிரமப்படுத்த கூடாது என்கிறது சாஸ்திரம். அதாவது ஐந்து குடும்பத்தினரிடம் இருந்து ஆளுக்கு ஒரு கவளமாக (உணவு உருண்டை) பிச்சை ஏற்க வேண்டும் என்று நியமம் உண்டு. இதற்கு ‘மாதுகரி பிட்சை’ என்று பெயர். பூக்களின் இதழ் நோகாமல் அதிலுள்ள தேனை(மதுவை) துளித் துளியாக, வண்டு குடிப்பது போல, சந்நியாசிகள் பிறருக்குச் சிரமம் தராமல் பிட்சை ஏற்பதை இப்படி சொல்வர். வடமொழியில் ‘மதுகரம்’ என்பதற்கு ‘வண்டு’ என்று பொருள். சத்ரபதி சிவாஜி, தன் குருவான சமர்த்த ராமதாசரிடம், நாடுமுழுவதையும் ஒப்படைத்து விட்டு, பெயரளவில்மன்னராக இருந்தார். சிவாஜியின் நாட்டை ‘மாதுகரி பிட்சை’யாக ஏற்றுக் கொண்டார்.