‘சுமத்யானி’ என்று விஷ்ணுவுக்கு ஒரு பெயருண்டு. திருமகளைப் பிரியாதவன்’ என பொருள்.திருமால் அவதரித்த போதெல்லாம் லட்சுமியுடன் எழுந்தருளினார். ராமனுடன் சீதையாகவும், கிருஷ்ணருடன் ருக்மிணியாகவும், லட்சுமி உடன் வந்தாள்.பிரகலாதனுக்காக அவசரக்கோலத்தில் திருமால் தனித்து துõணில் எழுந்து இரண்யனை வதம் செய்தார். அவரின் ஆவேசத்தை தணித்ததால்லட்சுமி நரசிம்மர் என்ற பெயர் வரக் காரணமானாள். லட்சுமிஇல்லாமல் ‘நான்’ இல்லை என நரசிம்ம அவதாரத்திலும் திருமால்நிலைநாட்டினார்.