திருவாமூர் திருநாவுக்கரசர் கோவிலில் குருபூஜை நிறைவு விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
11மே 2018 12:05
பண்ருட்டி: பண்ருட்டி திருவாமூர் திருநாவுக்கரசர் கோவிலில் குருபூஜை விழா நடந்தது. பண்ருட்டி அடுத்த திருவாமூரில் திருநாவுக்கரசர் கோவிலில் குரு பூஜை விழா கடந்த 7ம் தேதி துவங்கி நேற்று வரை ஜதீக முறைப்படி நடந்தது. சைவ 69 நாயன்மார்களில் முதன்மையானவரான திருநாவுக்கரசர் குருபூஜை விழா ஆண்டுதோறும் சித்திரை மாதம், அவர் பிறந்த சொந்த ஊரான பண்ருட்டி அடுத்த திருவாமூரில் நடைபெறுவது வழக்கம். அதன்படி கடந்த 7ம் தேதி காலை 6:00 மணிக்கு சிவபூஜையுடன் விழா துவங்கியது. 8:00 மணிக்கு மங்கல இசை, 10:00 மணிக்கு கணபதி பூஜை, 12:30 மணிக்கு அபிஷேகம் நடந்தது. 8ம் தேதி காலை 10:00 மணிக்கு நவக்கிரக ேஹாமம், மாலை பட்டிமன்றம் நடந்தது. நேற்று காலை 9:00 மணிக்கு மகந்யாச ருத்ர ேஹாமமும், இரவு 9:00 மணிக்கு அப்பர் சுவாமிகள் வீதியுலாவும், திருமுறை ஓதி அப்பர் ஐக்கிய காட்சியுடன் நிறைவு பெற்றது.