திருநெல்வேலி : தியாகராஜ சுவாமிகளின் 165வது ஆராதனை விழா இன்று(13ம்தேதி) காலை பாளை., தியாக பிரம்மம் இன்னிசை மண்டலத்தில் நடக்கிறது. தியாகராஜ சுவாமிகளின் 165வது ஆராதனை மகோத்சவ விழா பாளை., தியாக பிரம்மம் இன்னிசை மண்டபத்தில் இன்று(13ம்தேதி) காலை 10.15 மணிக்கு தியாகராஜசுவாமிகளின் திருஉருவச்சிலை கருவறையிலிருந்து மகா மண்டபத்திற்கு எழுந்தருளல் நிகழ்ச்சியும், ஆராதனை, பஞ்சரத்ன கீர்த்தனை, 18வித அபிஷேகங்கள் மற்றும் அலங்காரம் நடக்கிறது. இதனையடுத்து சங்கீத வித்வான்களும், மாணவ, மாணவிகளும் பங்கேற்கும் இசை நிகழ்ச்சியும், இரவு 9.30 மணிக்கு ஆஞ்சநேயர் உற்சவ வழிபாடும் நடக்கிறது. ஏற்பாடுகளை நிர்வாக அதிகாரி மற்றும் டிரஸ்ட் ஸ்தாபகர் செய்து வருகின்றனர்.