சிவகாசி: சிவகாசி பத்ரகாளியம்மன் கோயில் சித்திரை பொங்கல் விழா மே 1 கொடியேற்றத் துடன் துவங்கி 11 நாட்களாக நடந்தது. அம்மன் தினமும் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம், நேற்று மாலை நடந்தது. மழையையும் பொருட்படுத்தாமல்திரளான பக்தர்கள் பங்கேற்று, விநாயகர் எழுந்தருளிய சிறிய தேரை வடம் பிடித்து இழுத்து வந்தனர். அம்மன் எழுந்தருளிய பெரிய தேரை இழுத்து நிறுத்தனர். தொடர் மழையால் இன்று மாலை தேரோட்டம் நடக்கிறது.