பதிவு செய்த நாள்
12
மே
2018
05:05
மே 12, சித்திரை 29, சனி: தேனி வீரபாண்டி கவுமாரியம்மன் தேர், திருச்சி ஸ்ரீரங்கம் நம்பெருமாள் சப்பரம், திருப்பதி ஏழுமலையான் கத்தவால் சமஸ்தான மண்டபம் எழுந்தருளல், திருநள்ளாறு சனீஸ்வரர் ஆராதனை
மே 13, சித்திரை 30, ஞாயிறு: முகூர்த்தநாள், பிரதோஷம், மாத சிவராத்திரி, சிவகங்கை மாவட்டம் காரைக்குடி கொப்புடையநாயகி ரிஷப வாகனம், தேவகோட்டை ரங்கநாதர் புறப்பாடு, திருச்சி ஸ்ரீரங்கம் நம்பெருமாள் தேர், தேனி வீரபாண்டி கவுமாரியம்மன் தேர்.
மே 14, சித்திரை 31, திங்கள்: போதாயன அமாவாசை, சிறுத் தொண்ட நாயனார் குருபூஜை, வடுகநம்பி திருநட்சத்திரம், தேனி வீரபாண்டி கவுமாரியம்மன் முத்துப்பல்லக்கில் தேர் தடம் பார்த்தல், சிவகங்கை மாவட்டம் காரைக்குடி கொப்புடையநாயகி வெள்ளிக்குதிரை வாகனம், திருச்சி ஸ்ரீரங்கம் நம்பெருமாள் சப்தாவர்ணம் சாற்றுமுறை.
மே 15, வைகாசி 1, செவ்வாய்: அமாவாசை, கார்த்திகை விரதம், திருநெல்வேலி கைலாசபுரம் கைலாசநாதர் உற்ஸவம் ஆரம்பம், திருவள்ளூர் வீரராகவப்பெருமாள் புறப்பாடு, சுவாமிமலை முருகன் பேராயிரம் கொண்ட தங்கப்பூமாலை சூடியருளல், திருச்சி சமயபுரம் மாரியம்மன் பஞ்சப்பிரகாரம் எழுந்தருளல்.
மே 16, வைகாசி 2, புதன்: சந்திர தரிசனம், விருதுநகர் மாவட்டம் சிவகாசி விஸ்வநாதர் பூப்பல்லக்கு, தேனி வீரபாண்டி கவுமாரியம்மன் மஞ்சள் நீராட்டு விழா, திருச்சி சமயபுரம் மாரியம்மன் தங்க சிம்மாசனம், சிவகங்கை மாவட்டம் காரைக்குடி
கொப்புடையநாயகி யானை வாகனம்.
மே 17, வைகாசி 3, வியாழன்: சிவகங்கை மாவட்டம் காரைக்குடி கொப்புடையநாயகி தெப்பத்திருவிழா, திருச்சி சமயபுரம் மாரிய ம்மன் முத்துப்பல்லக்கு, விருதுநகர் மாவட்டம் சிவகாசி விஸ்வநாதர் பூதவாகனம்.
மே 18, வைகாசி 4, வெள்ளி: சதுர்த்தி விரதம், திருச்சி சமயபுரம் மாரியம்மன் தங்கக்கமல வாகனம், கீழ்த்திருப்பதி கோவிந்தராஜப் பெருமாள் திருமஞ்சனம், தஞ்சை மாவட்டம் மெலட்டூர் விநாயகர் புறப்பாடு, நாகை மாவட்டம் தேரெழுந்தூர் ஞானசம்பந்தர் புறப்பாடு.