* கடவுளே! உன்னிடம் சுகபோகம், மோட்சம் எதையும் கேட்கவில்லை. பக்தியை மட்டும் தானமாக கொடு; வேறு யாரிடமும் நான் கைநீட்ட மாட்டேன். * கடவுள் ஒருவர் மட்டுமே. அவரே எல்லா உயிர்களிலும் நிறைந்திருக்கிறார். அப்படி இருக்கும் போது, அவரை “என் கடவுள் வேறு; உன் கடவுள் வேறு” என்று பிரித்துப் பார்ப்பது வேண்டாத வேலை. * பூஜை, சேவை, விரதம், நியமம் எல்லாம் வெறும் விளையாட்டு க்களே. கடவுளை உள்ளத்தால் தொட வேண்டும். அவனுடைய திருநாமத்தை மனம் கசிந்து ஜபிக்க வேண்டும். * கனவில் முனங்கினாலும், கடவுள் பெயரைச் சொல்லும் அளவுக்கு அவரது திருநாமம் மனதில் பதியட்டும். அப்படிப்பட்ட நல்லவர்களின் பாதங்களுக்கு என் தோல் செருப்பாகட்டும். * உடலளவில் துறவியாக மாற அனைவராலும் எளிதில் முடியும். ஆனால், மனதளவில் மாறுவது என்பது கடினமான செயல். * பணம், பொன், பெண் போன்ற உலக இன்பங்களை புறக்கணி க்கும் பெரியவர்களின் காலடியில் உலகமே ஒரு தூசியாகும். * கடமையிலிருந்து தப்பி ஓட வேண்டாம். எப்போதும் பணிகளில் ஈடுபடுங்கள். அதே சமயம், அதிலிருந்து விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள். * கையில் ஜபமாலை உருளுகிறது. வாயோ இறைநாமத்தை ஜபிக்கிறது. மனமோ எங்கோ அலைந்து கொண்டிருக்கிறது. இப்படி கடவுளை வழிபடுவதை விட, சும்மா இருப்பது மேலானது. கதறுகிறார் கபீர்தாசர்