பதிவு செய்த நாள்
14
மே
2018
11:05
செஞ்சி: கீழ்மாம்பட்டு அம்மச்சார் அம்மன் கோவிலில் நடந்த தேர்திருவிழாவில் ஆயிரக்கணக்கானவர்கள் வடம் பிடித்து தேர் இழுத்தனர். செஞ்சி தாலுகா கீழ்மாம்பட்டு அம்மச்சார் அம்மன், செல்வ விநாயகர், ஸ்ரீநிவாச பெருமாள் கோவில் 19ஆம் ஆண்டு 10 நாள் மகா உற்சவம் மற்றும் 9ம் ஆண்டு தே ர்திருவிழா கடந்த 5ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. இதை முன்னிட்டு வினாயகர் பூஜை, அனுக்ஜை , கணபதி ஹோமம் நடந்தது. தினமும் பூங்கரகம் வீதியுலா நடந்தது வந்தது. 8ம் தேதி காலை 1008 பால்குடங்கள் ஊர்வலமும், தொடர்ந்து, செல்வ விநாயகர், அம்மச்சார் அம்மன், சீனுவாசபெருமாளுக்கு பால்குட அபிஷேகமும் நடந்தது. கடந்த 9 ம் தேதி மழை வேண்டி அம்மச்சார் அம்மனுக்கு108 இளநீர் அபிஷேகமும், வருண ஜபமும் நடந்தது. 11ம் தே தி மாலை அம்மச்சார் அம்மன் ஊஞ்சல் தாலாட்டும், பத்மினி தேவி மூர்த்தி த லைமையில் திருவிளக்கு பூஜையும் நடந்தது. 12ம் தேதி இரவு 12 மணிக்கு விநாயகர், ஸ்ரீநிவாசபெருமாள், அம்மச்சார் அம்மனுக்கு பூ பல்லக்கு நடந்தது. தொடர்ந்து, நேற்று காலை 9.30 ம ணிக்கு அம்மச்சார் அம்மன் திருத்தேர் வடம் பிடித்தல் நடந்தது. இதில் முன்னாள் மத்தியஅமைச்சர் ஏ.கே.மூர்த்தி, பத்மினி தேவி மூர்த்தி, தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்க செயலாளர் கிருஷ்ணதாஸ், விழாகுழுவினர் நாராயணசாமி மற்றும் கிராம மக்கள் பங்கேற்று தேர்வடம் பிடித்தனர். மாலை 3 மணிக்கு மகாஷ்பாஞ்சலி நடந்தது. விழாவையொட்டி பக்தர்களுக்கு தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது.