சோழவந்தான்;சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோயில் வைகாசி திருவிழா இன்று (மே 21) இரவு 7.30 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்கி 17 நாட்கள் நடக்கிறது. முக்கிய நிகழ்வாக மே 29 பால்குடம், அக்னிசட்டி எடுத்தல் நடக்கிறது. இன்று பூப்பல்லக்கும், மறுநாள் பக்தர்கள் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடனும் செலுத்துவர். ஜூன் 5 தேரோட்டம், 6தீர்த்தவாரி நடக்கிறது. தினமும் அம்மன் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வந்த அருள்பாலிக்கிறார்.