பதிவு செய்த நாள்
22
மே
2018
01:05
மேட்டுப்பாளையம்;மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவில் வளாகத்தில், தீயணைப்புத்துறை சார்பில், தீ தடுப்பு செயல் விளக்கப்பயிற்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு, கோவில் உதவி கமிஷனர் ராமு தலைமை வகித்தார். தீயணைப்பு நிலைய அலுவலர் முருகேசன் மேற்பார்வையில், கோவில் பணியாளர்களுக்கு, தீயணைப்புக் கருவிகளை பயன்படுத்தி, சிறு தீ விபத்துக்களைத் தடுப்பது எப்படி, தீயணைப்புக்கருவிகளை கையாள்வது எப்படி என, செயல் விளக்கம் அளிக்கப்பட்டது. எண்ணெய் காரணமாக தீ விபத்து ஏற்பட்டால், உலர்ந்த ரசாயனக்கலவையிலும், மின்சாரக்கசிவினால் தீ விபத்து ஏற்பட்டால், கார்பன் டை ஆக்சைடு மூலமும், குடிசைகளில் தீ விபத்து ஏற்பட்டால், தண்ணீரை பீய்ச்சி அடித்தும், தீயை அணைக்க வேண்டும் என விளக்கம் அளிக்கப்பட்டது.