இலங்கை தலைமன்னாரிலிருந்து 8 கி.மீ. தொலைவில் உள்ளது திருக்கேதீஸ்வரம். இது இலங்கையிலுள்ள புகழ் மிக்க சிவத்தலங்களில் ஒன்றாகும். இங்கு அருள்பாலிக்கும் இறைவன் கேதீஸ்வரப் பெருமான் என்றும், அம்பாள் கவுரி அம்மை என்றும் வணங்கப்படுகின்றனர். இங்கு தரப்படும் திருநீறு பிரசாதம் மிகுந்த சக்தி வாய்ந்தது. பேச்சிழந்தவர்களைப் பேச வைத்த அதிசயம் நிகழ்ந்த கோயில் இது என்கிறார்கள்.