பதிவு செய்த நாள்
26
மே
2018
12:05
சத்தியமங்கலம்: சத்தி வேணுகோபாலசாமி கோவில் கும்பாபிஷேக விழா, வெகு விமர்சையாக நடந்தது. சத்தியமங்கலத்தில், பவானி ஆற்றங்கரையோரம், 1,300 ஆண்டுகள் பழமையான, பிர சித்தி பெற்ற வேணுகோபாலசாமி கோவில் உள்ளது. இந்துசமய அறநிலையத்துறை கட்டுப் பாட்டில் இயங்குகிறது. கும்பாபிஷேகம் முடிந்து, 12 ஆண்டுகள் முடிவடைந்த நிலையில், கும்பா பிஷேக பணி தொடங்கியது. இதற்காக கோவிலில் மராமத்து பணி, பாலஸ்தாபன பூஜை நடந்தது. அனைத்து பணிகளும் முடிந்த நிலையில், 22 முதல் கும்பாபிஷேக நிகழ்வுகள் தொடங்கின. ஸ்ரீ பாஞ்சராத்ர ஆகம முறைப்படி, ஸ்ரீரங்கம்ஸ்ரீபத்மபரமஹம்ஸேத்யாதி ஸ்ரீலஸ்ரீ ஸ்ரீஸ்ரீஸ்ரீ ஸ்ரீரங்க நாராயண ஜீயர் சுவாமி தலைமையில், கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு, நேற்று (மே 25)ல் காலை கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. சத்தியமங்கலம் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த, ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர்.