திருவண்ணாமலையில், பவுர்ணமி கிரிவலத்துக்கு உகந்த நேரம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
28மே 2018 10:05
திருவண்ணாமலை : திருவண்ணாமலையில், பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரத்தை, கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
திருவண்ணாமலையில் பவுர்ணமி தோறும், லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்று, அருணாசலேஸ்வரர், உண்ணா முலையம்மனை தரிசித்து செல்வது வழக்கம். வைகாசி பவுர்ணமி கிரிவலம் செல்ல, பவுர்ணமி திதி இன்று (மே 28)ல் இரவு, 7:34 மணிக்கு துவங்கி, நாளை (மே 29)ல் இரவு, 8:38 வரை உள்ளது. இந்த நேரத்தில், கிரிவலம் செல்ல உகந்த நேரம் என, கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.