தி.மலை அருணாசலேஸ்வரர் கோவிலில் அக்னி நட்சத்திர தோஷ நிவர்த்தி பூஜை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
29மே 2018 03:05
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் அக்னி நட்சத்திர தோஷ நிவர்த்தியொட்டி, 1008 கலசங்கள் வைத்து சிறப்பு பூஜை நடந்தது.
அக்னி நட்சத்திரம், நேற்று நிறைவடைவதை முன்னிட்டு, அருணாசலேஸ்வரர் கோவிலில் 1008 கலசங்கள் வைத்து சிறப்பு பூஜை நடந்தது. நேற்று காலை, 7:00 மணிக்கு நான்காவது கால கலச பூஜை நடந்தது. அருணாசலேஸ்வரருக்கு, யாகசாலையில் வைக்கப்பட்ட கலசபுனித நீரால், சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, அக்னி தோஷ நிவர்த்தி பூஜை நடந்தது. தொடர்ந்து நேற்று இரவு முதல் முறையாக சமேத உண்ணாமலையம்மனுடன் அண்ணாமலையார் முத்து பல்லக்கில் மாட வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.