பதிவு செய்த நாள்
29
மே
2018
03:05
* மே 26, வைகாசி 12, சனி: சிவகங்கை மாவட்டம் அரியக்குடி ஸ்ரீநிவாசப் பெருமாள் திருக்கல்யாணம், மதுரை மாவட்டம் திருமோகூர் காளமேகப் பெருமாள் வைரச்சப்பரம்
* மே 27, வைகாசி 13, ஞாயிறு: முகூர்த்த நாள், பிரதோஷம், மாலை 4:30 – 6:00 மணிக்குள் நந்தீஸ்வரருக்கு அபிஷேகம் செய்து வழிபடுதல், பழநி முருகன்திருக்கல்யாணம், திருவாடானை,
மாயவரம், உத்தமர்கோவில், காளையார்கோவில், திருப்பத்தூர் சிவன் கோயில்களில் தேர்
* மே 28, வைகாசி 14, திங்கள்: வைகாசி விசாகம், அக்னி
நட்சத்திரம் முடிவு இரவு 2:11 மணி, திருப்பரங்குன்றம்
முருகன் பாற்குடக் காட்சி, பழநி முருகன் தேர், நம்மாழ்வார் திருநட்சத்திரம், சிவகங்கை மாவட்டம் நாட்டரசன்கோட்டை கண்ணுடைய நாயகி, மதுரை மாவட்டம் திருமோகூர் காளமேகப்பெருமாள் தேர்.
* மே 29, வைகாசி 15, செவ்வாய்: பவுர்ணமி விரதம், காஞ்சிப் பெரியவர் 125வது ஜெயந்தி, பழநி முருகன் தங்கப்பல்லக்கு, மதுரை கூடலழகர் உபயநாச்சியார்களுடன் தேர், காஞ்சிபுரம் குமரகோட்டம் முருகன் திருக்கல்யாணம், கடலூர் மாவட்டம் காட்டுபரூர் ஆதிகேசவபெருமாள் தேர்.
* மே 30, வைகாசி 16, புதன்: காஞ்சிபுரம் வரதராஜபெருமாள் உபயநாச்சியார்களுடன் பவனி, கடலூர் மாவட்டம் காட்டுபரூர் ஆதிகேசவப்பெருமாள் தெப்பம், அகோபிலமடம் 35வது பட்டம் அழகியசிங்கர் திருநட்சத்திர வைபவம், கரிநாள்.
* மே 31, வைகாசி 17, வியாழன்: திருஞானசம்பந்தர், திருநீலநக்கநாயனார், திருநீலகண்டயாழ்ப்பாணர், முருக நாயனார்
குருபூஜை, காஞ்சிபுரம் வரதராஜப்பெருமாள் நாச்சியார் திருக்கோலம், பழநி முருகன் மயில் வாகனம், மதுரை
கூடலழகர் தசாவதாரக் காட்சி, ஸ்ரீபெரும்புதூர் மணவாள மாமுனிகள் புறப்பாடு, கரிநாள்.
* ஜூன் 1, வைகாசி 18, வெள்ளி: குமரகுருபரர் குருபூஜை,
சிவகங்கை மாவட்டம் அரியக்குடி ஸ்ரீநிவாசப்பெருமாள் தெப்பம், மதுரை கூடலழகர் பெருமாள் கருட வாகனம், காஞ்சிபுரம் வரதராஜப்பெருமாள் கண்ணன் திருக்கோலம், மதுரை மாவட்டம் சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் காமதேனு வாகனம்.