பதிவு செய்த நாள்
31
மே
2018
11:05
போத்தனுார்: சுந்தராபுரத்தை அடுத்து செங்கோட்டையா காலனியிலுள்ள நாககாளியம்மன் கோவில், 21ம் ஆண்டு விழா, வீரபத்ரர் பொங்கல், படையல் பூஜையுடன் துவங்கியது. இரண்டாம் நாள் கணபதி ஹோமம், மூலவர், பரிவார தெய்வங்களுக்கு காப்பு கட்டுதல், பலி பீட அபிஷேகம், அம்மன் திருக்கொடி கட்டுதல், அம்மன் அழைத்தல் மற்றும் திருக்கல்யாணம் நடந்தன. நேற்று காலை சக்தி கரக ஊர்வலம், குறிச்சி பொங்காளியம்மன் கோவிலிலிருந்து புறப்பட்டு, சங்கம் வீதி, சாரதா மில் ரோடு வழியாக கோவிலை சென்றடைந்தது. மதியம் மகா அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை மற்றும் அன்னதானம் நடந்தன. மாலையில் நடந்த மாவிளக்கு வழிபாட்டில், திரளானோர் பங்கேற்றனர். இன்று காலை மஞ்சள் நீராட்டும், நிறைவு நாளான நாளை மாலை, மறுபூஜையும் நடக்கின்றன.