பழநி, பழநி அருகே பெரியகலையம்புத்துார் ஐகோர்ட் பத்ரகாளியம்மன் கோயில் வைகாசி திருவிழாவில் 2000க்கும் மேற்பட்ட பக்தர்கள் பூக்குழி இறங்கினர். நெய்க்காரப்பட்டி பேரூராட்சியைச் சேர்ந்த பெரியகலையம் புத்துார் ஐகோர்ட் பத்ரகாளியம்மன் கோயிலில் வைகாசி திருவிழா நடக்கிறது. விழாவை முன்னிட்டு நேற்றுமுன்தினம் சண்முகாநதியில் இருந்து இரண்டாயிரம் தீர்த்தக் குடங்கள் எடுத்து பத்ரகாளியம்மனுக்கு அபிேஷகம் செய்தனர். நேற்று அதிகாலை 2000க்கும் மேற்பட்ட பக்தர்கள் பூக்குழி இறங்கினர். மாவிளக்கு, அக்னி சட்டி, பால்குடங்கள், அலகு குத்தியும் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் அம்மனை வழிபட்டனர்.