பதிவு செய்த நாள்
31
மே
2018
12:05
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் வரதர் கோவில் தேரோட்டம், ஜூன் 2ல், நடைபெறவுள்ளதையொட்டி, தீயணைப்பு வீரர்கள் நேற்று, தண்ணீரை பீய்ச்சி அடித்து, தேரை சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் வைகாசி பிரம்மோற்சவம், மே, 27ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. நேற்று முன்தினம், மூன்றாம் நாள் பிரபல உற்சவமான கருடசேவை, வெகு விமரிசையாக நடந்தது. ஜூன், 2ல், காலை, 6:00 மணிக்கு ஏழாம் நாள் உற்சவமான, தேரோட்டம் நடைபெறவுள்ளது. இதற்காக, சில நாட்களுக்கு முன், வெயில், மழையில் நனையாமல் இருக்க, தேரின் பாதுகாப்புக்காக மூடப்பட்டிருந்த தகடுகள் பிரித்து எடுக்கப்பட்டன. அப்பகுதியில் இருந்த ஆக்கிரமிப்பு கடைகள் அப்புறப்படுத்தப்பட்டன. தேரின் மீது படிந்திருந்த துாசு, துகள்களை, காஞ்சிபுரம் தீயணைப்பு வீரர்கள், நேற்று காலை, தண்ணீரை பீய்ச்சி அடித்து சுத்தம் செய்தனர்.இதையடுத்து, தேர் அலங்கார பணிகள் துவங்கியுள்ளன.