பதிவு செய்த நாள்
18
ஜன
2012
10:01
திண்டுக்கல்:பழநி பாதயாத்திரை பக்தர்கள், இரவு 10 மணிக்கு மேல் நடக்க, போலீசார் தடை விதித்துள்ளனர். பழநியில் தைப்பூச விழா பிப்.,7 ல், நடக்கிறது. இதற்காக பல மாவட்டங்களில் இருந்து பக்தர்கள், பாதயாத்திரை செல்கின்றனர். நெடுஞ்சாலைகளில் செல்லும் போது, வாகனங்கள் மோதி விபத்து ஏற்படுகிறது. விபத்தை தடுக்க போலீசார் முயற்சி எடுத்துள்ளனர். இதன்படி பக்தர்கள், இரவு, 10 மணிக்கு மேல் ரோட்டில் நடக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஜெயச்சந்திரன் எஸ்.பி., கூறியதாவது:விபத்து ஏற்படாமல் தடுக்க, வாகன பிரசாரம் செய்கிறோம். துண்டு பிரசுரங்களும் வழங்கப்படுகின்றன. இரவு 10 மணிக்கு மேல் நடக்க வேண்டாம் என, அறிவுறுத்துகிறோம். இரவில் நடந்தால் ஏற்படும் பிரச்னைகள் குறித்தும் விளக்கி வருகிறோம். இரவில் தூங்கி விட்டு, காலையில் எழுந்து நடக்கலாம். அந்த வழியாக செல்லும் வாகனங்கள், 40 கி.மீ., வேகத்தில் செல்ல வேண்டும். பக்தர்கள் கூட்டமாக செல்லும் இடங்களில் மெதுவாக செல்ல அறிவுறுத்தியுள்ளோம். இவ்வாறு எஸ்.பி., கூறினார்.