பதிவு செய்த நாள்
01
ஜூன்
2018
12:06
வெள்ளகோவில் : வெள்ளகோவில், மாகாளியம்மன் கோவிலில், 98ம் ஆண்டு பொங்கல் பூச்சாட்டு, குண்டம் திருவிழா நடந்தது. வெள்ளகோவில் மாகாளியம்மன் கோவில், 98ம் ஆண்டு பூச்சாட்டு குண்டம் திருவிழா வினை முன்னிட்டு நேற்று காலை பொங்கல் வைத்தல், காவடி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்துதல் ஆகியனவும், மாலை, மாவிளக்கு புறப்பாடு, தொடர்ந்து அபிஷேக ஆராதனையும் நடந்தது.விழாவில், நேற்று காலை, 6:00 மணிக்கு தெப்பக்குளத்திலிருந்து அக்னி சட்டி ஊர்வலம் புறப்படுதல், பூக்குழி இறங்குதல், இரவு, 9:00 மணிக்கு, கும்பம் கங்கை புறப்படுதல் ஆகியன நடந்தது.இன்று காலை, 10:00 மணிக்கு மறு அபிஷேகம், அம்மன் திருவீதி உலா, மஞ்சள் நீராட்டுடன், விழா நிறைவடைகிறது.