பதிவு செய்த நாள்
01
ஜூன்
2018
12:06
கரூர்: என்.புகழூர், துர்காதேவி கோவில் மண்டலாபிஷேக விழாவில், ஏராளமானோர் பங்கேற்றனர். கரூர் என்.புகழூர் தவிட்டுப்பாளையம் அக்ரஹாரத்தில், துர்காதேவி ஆலயங்களின் கும்பாபிஷேகத்தை தொடர்ந்து, மண்டலாபிஷேகம் நடந்தது. இதை முன்னிட்டு, காவிரி ஆற்றுக்கு சென்று புனித நீராடி, தீர்த்தக்குடங்கள் எடுத்து வந்து, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. தயிர், பன்னீர், இளநீர், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பல்வேறு வகையான வாசனை திரவியங்களால், சிறப்பு அபிஷேகம் நடந்தது. பல்வேறு பூக்களால், அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது. சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டன. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை, திருப்பணிக் குழுவினர் செய்திருந்தனர்.