சிலர் பொய் சொல்லவும். லஞ்சம் வாங்கவும், பெண்களை ஏமாற்றவும் வெட்கப்பட மாட்டார்கள். இந்த தவறைச் செய்து மாட்டிக் கொண்டால், கடும் தண்டனை கிடைக்கும் என்று தெரிந்தும் தவறுகள் தொடர்கின்றன.இவர்களுக்காகத் தான் நபிகள் நாயகம் சொன்னார். “நாணம் நன்மையை மட்டுமே கொணர்கின்றது,” என்று.வெட்கப்படுதல் என்பது நல்ல குணம். எந்தக் கேவலம் வந்தால் என்ன! நமக்கு தேவை பணம் என்று அஞ்சாமல் ஒரு கூட்டம் சம்பாதிக்கிறது. யார் வாழ்க்கை எப்படி போனால் என்ன... தான் மட்டும் நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காக பொய், பித்தலாட்டம் செய்பவர்கள் பெருகி விட்டார்கள். இப்படிப்பட்டவர்களெல்லாம், தங்கள் செயலுக்காக வெட்கப்படாவிட்டால் இறைவனிடம் தண்டனை பெற நேரிடும். தவறு செய்பவர்கள் இந்த நோன்பு காலத்தில் திருந்துங்கள். பணம் மட்டுமே வாழ்க்கையல்ல; இறைவனின் அன்பைப் பெறுங்கள்.
இன்று நோன்பு திறக்கும் நேரம்: மாலை 6:42 மணி நாளை நோன்பு வைக்கும் நேரம்: அதிகாலை 4:15 மணி.