பதிவு செய்த நாள்
04
ஜூன்
2018
12:06
திருப்பூர்:தேர்த்திருவிழா நிறைவு பெற்றுள்ள நிலையில், தடுப்புச்சுவர் அமைத்து, தேருக்கான பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என, பக்தர்கள் வலியுறுத்தியுள்ளனர். பிரசித்தி பெற்ற விஸ்வேஸ்வரர், வீரராகவப் பெருமாள் கோவில் வைகாசி விசாகத் தேர்த்திருவிழா நடந்து முடிந்தது; கலைநிகழ்ச்சி, பட்டிமன்றம் ஆகியவை நடந்து வருகிறது.
இடப்பற்றாக்குறையால், விஸ்வேஸ்வரர் கோவில் தேர் உள்ளிட்ட இரு தேர்களும், வீரராகவப் பெருமாள் கோவிலில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.தேர் வீதியில், தேர்கள் வலம் வர ஏதுவாக, தேரை ஒட்டி இருந்த தடுப்புச்சுவர் கிரேன் உதவியுடன், ஒரு வாரத்துக்கு முன் அகற்றப்பட்டது. திருவிழா நிறைவடைந்த நிலையில், அகற்றப்பட்ட சுற்றுச்சுவர், மீண்டும் அவ்விடத்தில் எழுப்பப்படவில்லை.இதனால், பூ மார்க்கெட், அங்குள்ள வணிக வளாகம் மற்றும் கடைகளுக்கு வருவோர்,தங்கள் வாகனங்களை தேரை ஒட்டி நிறுத்தி செல் கின்றனர்; இரவில் சிலர் படுத்துறங்குகின்றனர்.இதனால், தேர் பாதுகாப்பு சார்ந்து, தேவையற்ற பிரச்னைகள் ஏற்படும். எனவே, அங்கு மீண்டும் தடுப்புச்சுவர் அமைக்க வேண்டும்.