கோவை பாப்பநாயக்கன்பாளையம் ஸ்ரீ ஸ்ரீநிவாஸப் பெருமாள் கோவிலில் நடந்த ப்ரம்ஹோத்ஸவ நிகழ்ச்சியில் அனுமத் வாகனத்தில் சதுர்வீதி புறப்பாடில் சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீநிவாஸப் பெருமாள் வீதியுலா வந்த பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
கோவை, பாப்பநாயக்கன்பாளையம் ஸ்ரீநிவாசப் பெருமாள் கோவிலில் ஆண்டு தோறும் வைகாசி மாதம், பத்துநாள் பிரம்ேஹாத்ஸவ உற்சவத்தி திருவிழா நடைபெறும். இந்தாண்டு, பிரம்மோத்ஸவ உற்சவம், கடந்த 26ம் தேதி துவங்கியது. தினமும் காலை, திருமஞ்சனம் மற்றும் வேதபாராயணம் பாடப்படுகிறது. பத்து நாள் உற்சவத்தில், நாள்தோறும் ஒரு வாகனத்தில் பெருமாள் திருவீதியுலா வருவார். நேற்று, அனுமத் வாகனத்தில் சதுர்வீதி புறப்பாடில் சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீநிவாஸப் பெருமாள் வீதியுலா வந்த பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். ஜூன் 6ம் தேதியுடன் பிரம்ேஹாத்ஸவ உற்சவம் நிறைவு பெறுகிறது.