பழநி: பழநி முருகன் கோவிலில் இரண்டாவது, ரோப்கார் அமைக்கும் பணி பூமி பூஜையுடன் நேற்று துவங்கியது. திண்டுக்கல் மாவட்டம், பழநி முருகன் மலைக்கோவில் ரோப்கார் ஸ்டேஷன் அருகே, 73 கோடி ரூபாய் செலவில், இரண்டாவது ரோப்கார் நவீன தொழில்நுட்பத்தில் அமைக்கப்பட உள்ளது. இப்பணியை பிரான்சை சேர்ந்த, போமா ரோப்வே நிறுவனம், சென்னை தனியார் நிறுவனத்துடன் இணைந்து மேற்கொள்கிறது. இதற்காக நேற்று ரோப்கார் அமைய உள்ள இடத்தில், சிறப்பு யாகபூஜையுடன், பூமி பூஜை நடந்தது. இணை ஆணையர் செல்வராஜ் கூறியதாவது: புதிய ரோப்காரில் ஒருபெட்டியில், 10 பேர் அமரலாம். மொத்தம் எட்டு பெட்டிகள் பொருத்தப்படும். 2 நிமிடங்களில் மலைக்கு செல்லலாம். தற்போதுள்ள ரோப்காரில் ஒருமணி நேரத்திற்கு, 20-0 பேர் செல்கின்றனர். புதிய ரோப்காரில், 1200 பேர் செல்லலாம். 18 மாதங்களில் இப்பணிகளை முடித்து, 5 ஆண்டுகள் பராமரிக்கும் வகையில் ஒப்பந்தம் செய்துள்ளோம் என்றார்.