பதிவு செய்த நாள்
05
ஜூன்
2018
12:06
கிருஷ்ணகிரி: உலக அமைதியும் சமாதானமும் வேண்டி, கிருஷ்ணகிரியில் நற்கருணை ஆராதனை பவனி நடந்தது. கிருஷ்ணகிரி, தூய பாத்திமா அன்னை ஆலயத்தில், உலக அமைதியும், சமாதானமும் வேண்டி, சிறப்பு நற்கருணை ஆராதனை பவனி, பங்குத்தந்தை சூசை தலைமையில் நடந்தது. இதை முன்னிட்டு, சாந்தி நகரில் உள்ள மாதா இருதய சபை கன்னியர் மடத்தில், நற்கருணை ஆராதனை மற்றும் ஆசீர்வாதம் நிகழ்ச்சி நடந்தது. பின்னர், நற்கருணை நாதரை அலங்கரிக்கப்பட்ட வாகனத்தின் மூலம், ஊர்வலமாக புனித அன்னாள் மேல்நிலைப்பள்ளி வளாகத்திற்கு கொண்டு வரப்பட்டு ஆசீர்வாதம் வழங்கப்பட்டது. பின்னர் கிருஷ்ணகிரி தூய பாத்திமா அன்னை ஆலயத்தில், பங்குத்தந்தை சூசை அடிகள், உலக நன்மைக்காகவும், சமாதானத்திற்காகவும் சிறப்புத்திருப்பலியும், நற்கருணை ஆராதனையும் செய்து, இறுதி ஆசீர்வாதத்தை வழங்கினார். ஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர்.