நஞ்சுண்டேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்; ஆக., 30ல் நடத்த முடிவு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
05ஜூன் 2018 12:06
இடைப்பாடி: இடைப்பாடி, நஞ்சுண்டேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகத்தை, வரும் ஆக., 30ல் நடத்த முடிவு செய்யப்பட்டது. இடைப்பாடி நஞ்சுண்டேஸ்வரர் கோவிலில், முதல்வர் பழனிசாமியால், முருகன், ஆஞ்சநேயர் கோவில்கள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. கோவிலின் தரைதளமும் புதியதாக அமைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, கும்பாபிஷேகம் நடத்துவதற்கான ஆலோசனை கூட்டம் நேற்று, முன்னாள் நகர்மன்ற தலைவர் கதிரேசன் தலைமையில் நடந்தது. வரும் ஆக., 30ல் கும்பாபிஷேகம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.