பதிவு செய்த நாள்
05
ஜூன்
2018
02:06
நம் உடல் என்ற கருவி தடையின்றி இயங்குவதற்கும் உதவும் மின்சார சக்திதான் உயிர். ஓர் உடலில் உயிர் இருப்பதன் அடையாளம் மூன்றே மூன்றுதான்.
1.உஷ்ணம் 2. உணர்ச்சி 3. ஊக்கம்.
இறந்துவிட்ட உடலில் இந்த மூன்றும் இருக்காது. இந்த மூன்றையும் குறையாமல் பாதுகாக்கும் உடலைவிட்டு உயிர் நீங்காது. இதுதான் அடிப்படை உயிர் இரகசியம்.
உணவின் வழியே உஷ்ணம் உற்பத்தியாகும். மனோலயத்தில்தான் உணர்ச்சி ஓட்டம் நிகழும். ஆன்மலயம்தான் ஊக்கத்தின் பிறப்பிடம். தூய உணவு, உடல் ஒத்துக் கொள்ளும் உணவு, முடிந்தவரை இளநீர், பதநீர், பழங்கள் போன்ற இயற்கை உணவை உண்பதன்வழி கழிவு குறைவான சுத்த உஷ்ணத்தை உற்பத்தி செய்து கொள்ள வேண்டும். அதிர்ச்சியும் பயமும் ஏக்கமும் கோபமும் உயிராற்றலைச் சிதைக்கும் மோசமான காரணங்கள். எல்லாம் இயற்கையே! நமக்கு மட்டும் நிகழ்வதல்ல! புதியதுமல்ல! என்ற மன உணர்வுடன் நடந்தவற்றை ஏற்றுக் கொள்வதன்வழி இந்தக் காரணங்களை வெல்லலாம். எதிர்மறை எண்ணங்களின் தாக்கமும் நம் உயிர் ஆற்றலைச் சிதைக்கும். எனவே எதிர்மறை எண்ணங்களைத் தூண்டிவிடும் சோகக் காட்சிகளையும் கொடூரக்காட்சிகளையும் டி.வி..., சினிமா போன்ற ஊடகங்களின் வழியே பார்ப்பதைத் தவிர்க்க வேண்டும். (Nஞுஞ்ச்tடிதிஞு கூடணிதஞ்டtண்) என்னும் எதிர்மறைச் சிந்தனையுடன் அலையும் மக்களைப் பார்க்காதீர்கள்; பழகாதீர்கள்; பேசாதீர்கள்; தொடாதீர்கள்; கேட்காதீர்கள்; நினைக்காதீர்கள். குறைந்த பட்சம் நம் ஊக்கம் நட்டமாவதையாவது தவிர்க்கலாம்.
அதே வேளையில் உயர்ந்தோரின் தரிசனம், பேச்சு, நினைப்பு, ஸ்பரிசம் எல்லாமே நம்மை ஊக்கப்படுத்தும். உயிரைக் தளிர்க்க வைக்கும். அவ்வப்போது அத்தகையோரைச் சந்திப்பதன்வழி செய்துகொள்ளவும், ஊக்கமுள்ள உரைகளையும் பாடல்களையும் நாள்தோறும் கேட்கவும், அத்தகைய மக்களை அடிக்கடி சந்தித்துப் புத்துணர்ச்சி பெறவும். தகுதியுள்ளோரின் பாராட்டு, புகழ், பரிசு போன்றவையும் உயிராற்றலை மிகுதிப்படுத்தும், பிறர் புகழும்படியும் பாராட்டும்படியும் வாழ முயலுங்கள். ஜெபம், தியானம், தவத்தின் மூலம் கிடைக்கும் தெய்வ உறவுகளின் வழியும் மகான்களின் ஆசியின் வழியும் உயிர்ஆற்றல் மிகுதியாகும். எனவே அவர்களின் உறவை வளர்த்துக் கொள்ள வேண்டும். உயிர்நலம் பேணி உஷ்ணத்தையும், உணர்ச்சியையும் ஊக்கத்தையும் தக்க வைத்துக் கொள்ளுங்கள்.