பதிவு செய்த நாள்
06
ஜூன்
2018
12:06
விழுப்புரம்:கண்டாச்சிபுரத்தில், பிரம்மாகுமாரிகள் மற்றும் ராஜயோக கல்வி ஆராய்ச்சி அறக்கட்டளை சார்பில் நடந்த அகில இந்திய கண்காட்சி பிரசார குழுவினருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. இளைஞர்களிடையே ஒழுக்க நெறிமுறைகளை உருவாக்கி, அவர்களை சமுதாய மாற்றத்தின் முன்னோடிகளாக ஆக்குவதற்கான விழிப்புணர்வு பஸ் பேரணி கடந்த ஆண்டு ஆகஸ்ட் 12ம் தேதி அகமதாபாத்தில் உள்ள காந்தி நினைவு மண்டபத்தில் துவங்கியது. இந்த அகில இந்திய நடமாடும் கண்காட்சி பஸ் பேரணி பல்வேறு மாநிலங்களுக்கு சென்று நேற்று, முன்தினம் விழுப்புரம் வந்தது. முன்னதாக கண்டாச்சிபுரம் பழனிவேலு நர்சரி மற்றும் பிரைமரி பள்ளி புதிய கட்டட வளாகத்தில், பிரம்மாகுமாரிகள் மற்றும் ராஜயோக கல்வி ஆராய்ச்சி அறக்கட்டளை குழுவினருக்கு, வரவேற்பு அளிக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு, பள்ளி தாளாளர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். தொழிலதிபர் புகழேந்தி முன்னிலை வகித்தார். பள்ளி முதல்வர் விஜயலட்சுமி வரவேற்றார். இந்நிகழ்ச்சியில், பள்ளி நிர்வாக அலுவலர் தட்சிணாமூர்த்தி, ஐ.டி.ஐ., முதல்வர் தட்சணாமூர்த்தி, பள்ளி துணை முதல்வர் தீபா மற்றும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.