பதிவு செய்த நாள்
06
ஜூன்
2018
04:06
தர்மபுரி: தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு, தர்மபுரி அடுத்த அதியமான்கோட்டை தட்சணகாசி காலபைரவர் கோவிலில், சிறப்பு பூஜை நடந்தது.
தட்சணகாசி காலபைரவர் கோவிலில் தேய்பிறை அஷ்டமி நாட்களில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், கர்நாடகா மற்றும் ஆந்திர மாநிலத்தில் இருந்தும், ஏராளமான பக்தர்கள், சுவாமி தரிசனம் செய்ய வருவது வழக்கம். மேலும், கோவிலுக்கு வரும் பக்தர்கள், சாம்பல் பூசணியில் தீபம் ஏற்றி, நேர்த்திக்கடன் செலுத்தி, 18முறை கோவிலை சுற்றி வலம் வந்து, காலபைரவரை தரிசனம் செய்வர். தேய்பிறை அஷ்டமி நாளான இன்றும் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து, சாம்பல் பூசணியில் தீபம் ஏற்றி, நேர்த்திக்கடன் செலுத்தினர். முன்னதாக, காலை 6:00 மணிக்கு, காலபைரவருக்கு அஷ்டபைரவ யாகம், அஷ்டலஷ்மி யாகம், தனகார்சன குபேரயாகம், அதிருந்ர யாகம் உள்ளிட்ட யாகங்கள் நடந்தன. தொடர்ந்து, 64 வகையான அபிேஷகங்கள், 1,008 அர்ச்சனை மற்றும் 28 ஆகம பூஜைகள் நடந்தன.