திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி ஊஞ்சல் உற்ஸவம்: ஜூன் 18ல் துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
07ஜூன் 2018 11:06
திருப்பரங்குன்றம், திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஜூன் 18ல் ஊஞ்சல் திருவிழா துவங்குகிறது.அன்று உற்சவர் மற்றும் தெய்வானைக்கு காப்பு கட்டப்பட்டு, திருவாட்சி மண்டப ஊஞ்சலில் எழுந்தருளுவர். ஜூன் 26 வரை இந்நிகழ்ச்சி நடக்கும். ஜூன் 27ல் உச்சிகால பூஜையில் மூலவர்கள் சுப்பிரமணிய சுவாமி, கற்பக விநாயகர் உட்பட சுவாமிகளுக்கு மா, பலா, வாழை படைக்கப்பட்டு பூஜை நடக்கும்.