பழநி, பழநி முருகன் கோயில் உண்டியலில் 28 நாட்களில், ரூ. 2 கோடியே 4 லட்சத்து 55 ஆயிரம் வசூலாகியுள்ளது.பழநி முருகன்கோயில் கார்த்திகை மண்டபத்தில் உண்டியல் எண்ணிக்கை நடந்தது. இதில் தங்கம்-975 கிராம், வெள்ளி- 12ஆயிரத்து 740கிராம், வெளிநாட்டு கரன்சிகள்- 394, ரொக்கம் ரூ. 2 கோடியே 4 லட்சத்து 55ஆயிரத்து 355 கிடைத்துள்ளது. இணை ஆணையர் செல்வராஜ், துணை ஆணையர் செந்தில்குமார், உதவிஆணையர் சிவலிங்கம் மற்றும் கல்லுாரி மாணவிகள், வங்கி, கோயில் அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இன்றும் உண்டியல் எண்ணிக்கை நடக்கிறது.