மந்தாரக்குப்பம்: நெய்வேலி ஸ்ரீ கிருஷ்ணசாயி துவாரகமாயி கோவிலில் மகா கும்பாபிஷேகம் நடந்தது. அதனையொட்டி கடந்த 4ம் தேதி மாலை 6:00 மணிக்கு, கணபதி ேஹாமத்துடன் விழா துவங்கியது. தொடர்ந்து தினமும் அபிஷேக, ஆராதனையும், 5ம் தேதி மாலை யாக சாலை பிரவேசம், முதல் கால யாகசாலை பூஜையும் 6ம் தேதி இரண்டாவது கால யாகசாலை பூஜையும் நடந்தது. கும்பாபிஷேக தினமான நேற்று 7ம் தேதி காலை 7:00 மணியளவில் நான்காம் கால யாகசாலை பூஜையும், காலை 9:00 மணிக்கு யாத்ரா தானம் கடம் புறப்படாகி 10:15 மணியளவில் கும்பாபிஷேகம் நடந்தது. விழா ஏற்பாடுகளை ஸ்ரீ ஷீரடி சாயி சேவா சமிதி தலைவர் பழனி தலைமையில் நிர்வாக குழுவினர் செய்திருந்தனர். என்.எல்.சி., சேர்மன் சரத்குமார் ஆச்சார்யா, இயக்குனர்கள் விக்ரமன், ராகஷே்குமார், தங்க பாண்டியன், முன்னாள் இயக்குனர் செல்வகுமார், முதன்மை கண்காணிப்பு அதிகாரி வெங்கடசுப்ரமணியன், யோகமாயா சாந்தி, நகர நிர்வாக அதிகாரி கார்த்திகேயன் மற்றும் பக்தர்கள் பங்கேற்றனர்.