பதிவு செய்த நாள்
08
ஜூன்
2018
11:06
பழநி: பழநி முருகன் கோவில் உண்டியலில், கோடை விடுமுறை, வைகாசி விசாக விழா காரணமாக மூன்று மடங்கு அதிகமாக, 3.67 கோடி ரூபாய் வசூலாகி உள்ளது. பழநி முருகன் கோவிலில் கோடை விடுமுறை மற்றும் வைகாசி விசாகத்தையொட்டி, பக்தர்கள், சுற்றுலா பயணியர் குவிந்தனர். இதனால், 28 நாட்களில் நிரம்பிய உண்டியல்கள் திறக்கப்பட்டு, இரண்டு நாட்களாக எண்ணப்பட்டன.முதல் நாள் தங்கம்,- 975 கிராம், வெள்ளி, 12 ஆயிரத்து, 740 கிராம், வெளிநாட்டு கரன்சிகள்- 394, ரொக்கம், 2.05 கோடி ரூபாய் கிடைத்தது. இரண்டாம் நாள் எண்ணிக்கையில் தங்கம்,- 355 கிராம், வெள்ளி- 2,780 கிராம், வெளிநாட்டு கரன்சி -203, ரொக்கம், 1.62 கோடி ரூபாய் கிடைத்துள்ளது. இது வழக்கத்தை விட மூன்று மடங்கு அதிகம்.