பதிவு செய்த நாள்
08
ஜூன்
2018
12:06
வந்தவாசி: வந்தவாசி அருகே, ஜெயின் கோவிலில் திருட்டுப்போன, இரண்டு மகாவீரர் சிலைகள், அப்பகுதியில் உள்ள குளத்தில் கண்டெடுக்கப்பட்டன. திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த, பிருதூர் கிராமத்தில் உள்ள, ஆதிநாதர் ஜெயின் கோவிலில் கடந்த, 2, நள்ளிரவு கோவில் பூட்டை உடைத்து உள்ளே சென்ற மர்மநபர்கள், இரண்டு மகாவீரர் சிலைகள் மற்றும் உண்டியலை உடைத்து, பணத்தை திருடிச் சென்றனர். வந்தவாசி வடக்கு போலீசார் விசாரித்து வந்தனர். இந்நிலையில், நேற்று அதே கிராமத்தில் உள்ள குளத்தில், நீர் எடுக்க சென்ற பெண்கள், இரண்டு மகாவீரர் சிலைகள் கிடப்பதை கண்டனர். இதையடுத்து, இரண்டு சிலைகளையும், போலீசார் மீட்டனர்.