கடலாடி, கடலாடியில் உள்ள செல்வ காமாட்சி அம்மன், செல்வ விநாயகர், பாலமுருகன், கருப்பண்ணசாமி உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு கடந்தாண்டு கும்பாபிஷேகம் நடந்தது. முதலாம் ஆண்டை முன்னிட்டு மூலவர்களுக்கு 18 வகையான அபிஷேக, ஆராதனைகள், நமாவளி உள்ளிட்டவை நடந்தது. பூஜைகளை டி.எம்.கோட்டை நாகநாத குருக்கள் செய்திருந்தார். அன்னதானமும், விளக்கு பூஜையும் நடந்தது.