கரூர்: கரூர், மாரியம்மன் வைகாசி திருவிழா கடந்த, 13ல் துவங்கி, ஜூன், 10 வரை நடக்கிறது. திருவிழாவை முன்னிட்டு நேற்று (ஜூன் 8ல்) இரவு முத்துபல்லாக்கு உற்சவம் சிறப்பாக நடைபெற்றது. விழாவில் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.