பதிவு செய்த நாள்
09
ஜூன்
2018
11:06
திருப்பதி : திருமலை, ஏழுமலையான் முடி காணிக்கை வருமானம், 10.48 கோடி ரூபாய் வசூலானதாக, தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. திருப்பதி, திருமலைக்கு வரும் பக்தர்கள், ஏழுமலையானுக்கு காணிக்கையாக சமர்ப்பிக்கும் தலைமுடியை, தேவஸ்தானம் ரகம் வாரியாக தரம் பிரித்து, இணையதள ஏலம் வாயிலாக விற்று வருகிறது. இந்த ஏலம், மாதந்தோறும் முதல் வியாழக்கிழமை, தேவஸ்தான செயல் இணை அதிகாரி முன்னிலையில் நடக்கிறது. அதன்படி, நேற்று முன்தினம் மாலை நடந்த ஏலத்தில், 8,200 கிலோ தலைமுடி விற்பனையானதில், தேவஸ்தானத்திற்கு, 10.48 கோடி ரூபாய் வருமானம் கிடைத்ததாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.