கும்பாபிஷேக விழாவிற்கு தீர்த்தக்குடம் எடுத்த பக்தர்கள்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
09ஜூன் 2018 12:06
கிருஷ்ணராயபுரம்: புணவாசிப்பட்டி அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு, பக்தர்களின் தீர்த்தக் குட ஊர்வலம், நடந்தது. கிருஷ்ணராயபுரம் அடுத்துள்ள புணவாசிப்பட்டியில், அங்காள பரமேஸ்வரி கோவில் உள்ளது. இக்கோவில் கும்பாபிஷேக விழா, நாளை நடக்கிறது. இதைமுன்னிட்டு, அப்பகுதி மக்கள், லாலாப்பேட்டை காவிரி ஆற்றில் இருந்து, தீர்த்தக்குடம் எடுத்து கொண்டு, ஊர்வலமாக அங்காள அம்மன் கோவிலுக்கு நேற்று சென்றனர். இந்நிகழ்ச்சியில், 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். கும்பாபிஷேக விழாவிற்கான ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகக் குழுவினர் செய்து வருகின்றனர்.