அவனியாபுரம், அவனியாபுரம் கல்யாணசுந்தரேஸ்வரர்-பால மீனாம்பிகை கோயிலுக்கு சொந்தமான இரு மண்டபங்கள் நல்லதங்காள் ஊரணி பகுதியில் உள்ளன. அங்கு முட்புதர் மண்டி கிடப்பதால் துாய்மைப்படுத்த வேண்டும் என அப்பகுதியினர் கோரிக்கை விடுத்தனர். இதன்படி 30 ஆண்டுகளுக்குபின்பு நேற்று மாலையில் நிர்வாக அலுவலர்கள் சுரேஷ்கண்ணன், மாரியப்பன், ஆய்வாளர் சாந்தி தலைமையில் அறநிலையத்துறையினர், பக்தர்கள் ஒத்துழைப்புடன் சுத்தம் செய்தனர். கோயிலுக்குள் சிதிலம் அடைந்த சிறிய நந்தி சிலை இருந்தது.